கடந்த 26.11.2020 ''அதிக வருமானம் பார்த்து மிரளவைத்த காவலா்கள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!'' என்ற தலைப்பில், திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் குமரேசன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனைக்கு உதவி செய்ததாக தெரியவந்ததால், இவர்களை ஆயுதப்படைக்கு மாற்றி டி.ஐ.ஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார் என்று இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காவலர்கள் குமரேசன் மற்றும் ராம்குமார் ஆகியோர், மேற்கண்ட தகவல் உண்மைக்கு மாறாக இருக்கிறது என்றும் இருவரையும் துறை நிர்வாக காரணத்திற்காகவும், துறையில் ஏற்படும் நிர்வாக சாதாரண பணியிட மாற்றத்தின் அடிப்படையிலும் கடந்த 23.11.2020 அன்று திருச்சி ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றம் செய்து உத்தரவு வாங்கியதன் பேரில் இருவரும் அன்றைய தினமே பணிமாறுதல் இடத்தில் பணி ஏற்பு செய்துக்கொண்டு பணியை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.