Skip to main content

இருண்டது தமிழகம்!  தென் மாவட்ட நாடித்துடிப்பு!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
n

 

தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் தமிழர்களுக்கும் உதிரமாயிருந்த உன்னதத் தலைவர் கலைஞர், விடை கொடுதாயே என்று பயணம் புறப்பட்டு விட்டார். தேசமே கதறுகிறது. தமிழகம் இருண்டு போய்க் கிடக்கிறது.

 

கடையை அடையுங்கள், பேருந்தை இயக்காதே. தொழிலை நிறுத்து என்ற ஆவேசக்குரலோடு எந்த ஒரு கரை வேட்டியோ மனிதரோ வரவில்லை. கலைஞர் காலமானார் என்ற தகவல் மின்னலாய் பாய்ந்த நேரத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடைகள் தானாகவே அடைபட்டன. பேருந்துகள் முடங்கின. பெட்டிக் கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பூட்டுக்கள் தொங்கின. இருபதாயிரம் விசைத் தறிகளைக் கொண்ட லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்களிருக்கும் நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் தாலுகாவின் தொழில் நகரம் ஸ்தம்பித்தது.

 

p

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்ட துக்கத்தையே மக்களின் முகத்தில் காண முடிந்தது. அத்தனை இறுக்கம். மாவட்டங்களில் ஊசி முனை அளவு கூட அசம்பாவிதம் நடந்ததாகத் தகவலுமில்லை. அனைத்தும் இயல்பாகவே நடந்தது.

 கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கு. மறியல்.

 தென்மாவட்டமே ஒசையின்றி இருந்த கணத்தில் அந்த இரவில் பத்தரைமணி வாக்கில் நெல்லை மாவட்டத்தின் தென்காசி நகரில் தி.மு.க. ந.செ. சாதிர் தலைமையில் திரண்ட உடன்பிறப்புக்கள், ஐந்து முறை முதல்வராயிருந்தவர் அவரால் பலனடைந்த பிரிவினர் ஏராளம், அவருக்கு மெரினாவில் ஆறடி இடத்தை ஒதுக்குங்கள் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை நகர போலீசார் கைது செய்தார்கள்.

k

 கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன்.

 1949ல் அண்ணா, கழகம் தொடங்கிய நேரத்தில் கலைஞரை தூத்துக்குடிக்கு அனுப்பி அங்கே கழகத்தைத் தொடங்கி வைக்கச் சொன்னார். கே.வி.கே. சாமியை மா.செ. பொறுப்பில் வைத்த கலைஞர் அங்கே கழகத்தைத் தொடங்கி வைத்தார். 1949 களிலிருந்தே திராவிட பாரம்பரியத்தில் ஊறி வந்த குடும்பமான தூத்துக்குடியின் தங்கராஜ் நாடார், கலைஞரின் மீதான ஈர்ப்பு காரணமாகக் கருவிலேயே தன் மகனுக்கு கருணாநிதி என்று பெயரிட்டார். மாப்பிள்ளை என்று சொல்லி ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் அது துள்ளுமாம். போலவே, பெயருக்கேற்றவாறு இலக்கியத்திலும், அரசியல் மேடைப் பேச்சிலும் கலக்கி வரும் கருணாநிதி, 67 முறை கலைஞரைச் சந்தித்துப் பேசியவர்.

1951ல் தேர்தலில் ஜெயித்த புதிய எம்.எல்.ஏ.க்கள். அப்போது தான் சட்டசபைக்குள் வந்து கொண்டிருந்தார்கள். அது சமயம் பத்திரிகையாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எத்தகைய உணர்வுடன் சட்டசபைக்கு வருகிறீர்கள் என்று கேட்டதற்கு கன்னா, பின்னா வென்று தங்கள் மனதுக்கு எட்டியதைச் சொன்னர்கள்.

 

குளித்தலைத் தொகுதியிலிருந்து ஜெயித்து முதன் முதலாக எம்.எல்.ஏ.வாக வந்த கலைஞரிடமும் அதே கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைக்க,

கற்கும் மாணவனாய் உள்ளே செல்கிறேன். கற்பிக்கும் ஆசிரியராய் வெளியே வருவேன் என பிசிரில்லாமல், பற்ற வைத்த வெடி போன்ற பதிலாய் வந்ததைக் கேட்ட பத்திரிகையாளர்களின் புருவங்கள் உயர்ந்தன.

அ.தி.மு.க.வின் டாப் லெவல் பேச்சாளரான அந்த கருணாநிதி, தற்போது அ.தி.மு.க.விலிருந்தாலும், கலைஞரின் பிரிவு தாளாமல், இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிச் சொல்லிச் சொல்லிக் கதறுகிறார்.

 

தாள மாட்டாத மரணங்கள்

 

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகிலுள்ள பிச்சத்தலைவன் பட்டிக் கிராமத்தின் கோயில் பிள்ளை கலைஞரின் மீதான பற்றுதலால் தன் மகனுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டிய முதியவர். வயதான காலத்தில் கிராமத்தில் வைத்திருக்கும் பெட்டிக் கடை வருமானத்தில் அவரும் அவருடைய மனைவியும் வயிற்றைக் கழுவியவர்கள். டீக்குடிப்பதற்காக கிராமத்தின் கடைக்குப் போனவர், அங்குள்ள டி.வி.யில் கலைஞரின் உடல் நலத்தில் பின்னடைவு என ப்ளாஷ் ஒட, தாங்கமாட்டாமல் தன் மார்பைப் பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்தவரின் மூச்சு, அங்கேயே அடங்கியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம், கான்சரபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் தி.மு.க.வின் கி.க. செ. காவேரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கலைஞரின் உடல் நிலைக் குறைவைப் பொறுக்க மாட்டாமல் கவலையோடிருந்தவர், தாங்க முடியாத சோகத்தால் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தின் சுரண்டைப் பக்கமுள்ள, வீ.கே.புதூரைச் சேர்ந்த பிச்சையாவுக்கு 80 வயது. தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர். 1977ல் கலைஞர் அந்தக் கிராமத்தில் தி.மு.க.வின் கொடியை ஏற்றியபோது கொடிக்கம்பம் முறிந்து விழுந்ததில் பிச்சையாவின் இரண்டு விரல்கள் துண்டானது. சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு அவரைப் பார்த்து நலம் விசாரித்த கலைஞர் அவருக்கு ஐநூறு ரூபாய் நிதி உதவியும் செய்திருக்கிறார்.

காவேரி மருத்துவமனையில் கலைஞர் ஒரு வாரமாக தீவிர சிசிச்சைப் பிரிவிலிருந்த செய்தி பிச்சையாவை மிகவும் பாதித்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் மயக்க மடைந்த அவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள் ஆனாலும் கவலையில், அவரது உயிர் அங்கேயே பிரிந்திருக்கிறது.

கலைஞரின் பிரிவு, தமிழகத்தின் உயிர்த்துடிப்பையே அசைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்