நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர், ''மத்திய பாரதிய ஜனதா அரசும், மாநில அதிமுக அரசும் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் எழுத்து சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் எந்த அளவுக்கு பாழ்பட்டுப்போயிருக்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகத்தான் மக்களின் உணர்வுகளை மக்கள் மன்றத்தில் தைரியமாக பதிவு செய்கிற நக்கீரன் இதழின் ஆசிரியர் மரியாதைக்குரிய கோபால் அவர்களுடைய கைது வெளிப்படுத்தியிருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.
ஆளுகிற ஆட்சியாளர்கள் மீதான தவறுகளை எடுத்துச் சொல்லக் கூடாது. அவர்களுக்கு எதிரான
கருத்துக்களை பதிவிடக்கூடாது என்கிற சர்வாதிக்காரத்தை இந்த கைது சம்பவம் வெளிப்படுத்துகிறது.
முதல் அமைச்சர், அமைச்சர்கள், ஆளுநர் இப்படி இருக்கக்கூடிய மக்கள் பிரதிகளுடைய, பதவியில் இருக்கக்கூடியவர்கள் செய்யக்கூடிய தவறுகளை யாருமே எடுத்துச்சொல்லக் கூடாது என்கிற மிகப்பெரிய சர்வாதிக்காரத்தினுடைய உச்சமாகத்தான் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுடைய கைது நடந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை இன்று நிகழ்த்தப்பட்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தளவில் நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்'' என்றார்.