காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டையை தடை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தினால் சென்னை அண்ணா சாலை போராட்டக்களம் போல் காட்சி அளித்தது.
போராட்டத்தின் காரணமாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன. போராட்டத்தினால் கூடுதல் பாதுகாப்பு - பதற்றம் இருந்ததால் ஐபிஎல் போட்டி வீரர்கள் எழும்பூர் தனியார் விடுதி்யில் இருந்து ஸ்டேடியத்திற்கு புறப்படும்போது பதற்றத்தில் அம்பயரை விடுதியிலேயே விட்டுச்சென்றுவிட்டனர். கொல்கத்தா டைட் ரைட்ஸ் வீரர்களுடன் அம்பயர் அழைத்துசெல்லப்பட்டிருக்க வேண்டும்.
அம்பயர் இல்லாமல் வீரர்கள் மட்டும் மைதானத்திற்கு சென்றனர். இதனால் 7.30 மணிக்கு டாஸ் போட வேண்டியதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், அம்பயரை தனி்யாக பலத்த பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்கு அழைத்துச்சென்றது ஐபிஎல் நிர்வாகம்.