Skip to main content

3 மாதம் கர்ப்பத்தை தடுக்கும் புதிய கருத்தடை ஊசி அறிமுகம்

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
3 மாதம் கர்ப்பத்தை தடுக்கும் புதிய கருத்தடை ஊசி அறிமுகம்

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் புதிய கருத்தடை ஊசி அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கருத்தடை ஊசியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘18 முதல் 45 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்கள் உள்பட அனைத்து தாய்மார்களும் இந்த கருத்தடை ஊசியை உபயோகப்படுத்தலாம். இது சினைமுட்டை உருவாவதை தற்காலிகமாக தடுத்து கரு உருவாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு கர்ப்பத்தை தடுக்க இயலும்.

அதன்பின்னர், மீண்டும் குழந்தை பேறு பெறலாம். முதல்கட்டமாக இந்த கருத்தடை ஊசி அரசு ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற்ற டாக்டர்களால் தாய்மார்களுக்கு இலவசமாக போடப்படும்’ என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்