Skip to main content

சொந்த கிராமத்தில் துப்பாக்கி மிரட்டலுக்கு ஆளான இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர்! 

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Indian National League state president subjected to gun threats in his hometown!

 

 

சென்னையைச்  சேர்ந்த பஷீர் அகமது, இந்திய தேசிய லீக் கட்சியின்  மாநில தலைவர் ஆவார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள, தனது சொந்த ஊரான வீரசோழனுக்கு வந்தார். அங்கு, மேலவண்டல் தெருவிலுள்ள அவரது வீட்டின் அருகில், சென்னை ரெட்ஹில்ஸ் கோனிமேடுவைச் சேர்ந்த கலிலூர் ரஹ்மான் என்பவர், TN 05 BX 8337 எண் கொண்ட  ‘கியா’ காரில் வந்து, பஷீர் அகமதுவை தாக்க முயற்சித்துள்ளார். தாக்குதலைத் தடுக்க வந்தவர்களை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தாக்கிவிட்டு தப்பிவிட்டார்.  இது குறித்து பஷீர் அகமது, வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  

 

துப்பாக்கி மிரட்டலுக்கு என்ன காரணமாம்? கலிலூர் ரஹ்மானிடம் பஷீர் அகமது ரூ.3 கோடி கடன் வாங்கியிருக்கிறார். ரூ.1 ½ கோடியை மட்டுமே திருப்பித் தந்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்காத நிலையில், சென்னையிலிருந்து, கலிலூர் ரஹ்மான் தனது ஆட்களுடன் பின்தொடர்ந்து வந்து, பஷீர் அகமதுவை தாக்க முயற்சித்துள்ளார். வீரசோழன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்