இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியன்-2 படத்தின் இணை இயக்குனர் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை, கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.