பொற்றாமரை குளத்தின் நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக்கூடாது. பொற்றாமரை குளத்தில் உள்ள நீர் இளம் பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்பு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாட்கள் பூஜை நடைபெற்றது. இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவானது கடந்த ஜூலை மாதம் தொடங்கி, சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து சிலை பாதுகாப்பாக அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து குளத்தில் நீர் நிரப்பும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் ஈடுப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 22- ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு.