Published on 28/03/2019 | Edited on 28/03/2019
மதுரையில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்,
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள 16 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நான்கு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்,
அதனைத் தொடர்ந்து நிர்மலாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிர்மலாவை சிறையில் அடைத்தனர்.