இந்தியா மட்டுமின்றி கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. நோய் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் தொற்றை இந்தியா உட்பட உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று 50ஐ தாண்டி பதிவாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், கரோனா தொற்று சமீபமாக அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் எச்சரிக்கையுடன் கரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது அதன் காரணமாக இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனமாக இருக்கவும் தெரிவித்துள்ளார். மேலும், பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.