ஈரோட்டில் இந்த மாதம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏழு பேர் கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கி அவர்கள் தொழுகை மற்றும் பாடம் நடத்தினார்கள். அந்த ஏழு பேரில் இரண்டு பேர் சொந்த ஊரான தாய்லாந்து நாட்டுக்கு செல்ல 16 ஆம் தேதி கோவை விமான நிலையம் சென்றபோது அதில் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது உடனே அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் அந்த நபர் அன்றே இறந்து விட்டார். அவர் இறப்புக்கு காரணம் சிறுநீரக பிரச்சனை என கூறப்பட்டது. மற்றொருவரை விசாரித்ததில் மேலும் 5 பேர் ஈரோட்டில் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார். அதனடிப்படையில் ஈரோடு வந்து அந்த ஐந்து பேரையும் விசாரித்து மொத்தம் 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவருக்கு கரானா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் இவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்திய போது பழகிய நபர்கள் என 169 குடும்பங்களில் மொத்தம் 694 பேர் கொல்லம்பாளையம் மற்றும் குப்பைகாடு என 9 தெருக்களில் உள்ள மக்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
தற்போது அவர்களோடு பழகிய மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிருந்து டெல்லி சென்ற ஒரு இஸ்லாமியர் அங்கிருந்த மசூதியில் தங்கியிருந்ததாகவும், அவருக்கும் இது உறுதியாகி இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றில் 5 பேர் உள்ளார்கள். இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து பழகிய நபர்களை கணக்கிட்டது போது முதலில் 694 பேர் என்ற நிலையில் அடுத்து 1200 பேர் என வந்தது. தற்போது இன்றுவரை 5120 பேர்கள் வரை பழகியவர்வர்களோடு தொடர்புடையவர்கள் என தற்போது 5120 பேர் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் ஈரோட்டில் பெரும் பயத்தை உண்டாக்கி வருகிறது.