ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சிப்காட் வ.ஊ.சி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன். இவருக்கும் வாலாஜா பாக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த காவியாவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர்க்கு 6 வயதில் தருண் என்ற ஆண் குழந்தை இருந்தது.

கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டு கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு காவியா வாலாஜா பாக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தாய் வீட்டில் இருந்த காவியாவுக்கும் ராணிப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தியாகுவுக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது.
இதனை அறிந்த தியாகு தயார் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார். இருவரும் வாலாஜாவில் உள்ள பெல்லியப்பா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இரண்டாவது கணவனான தியாகு எவனோ பெற்றப் பிள்ளையை நான் ஏன் வைத்து வளக்க வேண்டும் என்று அந்த குழந்தையைக் கொடுமை படுத்தி உள்ளார். இதற்கும் அந்த குழந்தையின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த காவியாவின் அக்கா அஜந்தா ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் என் தங்கை மகனைக் கொடுமைப்படுத்துகிறாள் அவனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கேட்டு புகார் கொடுத்து உள்ளார்.
இதனை விசாரித்த காவல் ஆய்வாளர் , அந்தக் குழந்தையிடம் கேட்டபோது நான் என் அம்மாவுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளது. தன் மகனை அழைத்து சென்றுள்ளார் காவியா. சில நாட்களில் அந்த பையன் வீட்டில் இல்லையாம். அக்கம் பக்கத்தினர் குழந்தை எங்கே எனக் கேட்டபோது விடுதியில் சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளார்கள் கணவனும் மனைவியும்.
தற்போது கரோனா பரவலால் குழந்தை வீட்டுக்கு வராமல் இருப்பதைப் பார்த்து சந்தேகமாகி விசாரித்தபோது சரியான பதில் இல்லையாம். இதனால் உறவினர்கள் மீண்டும் புகார் தந்துள்ளனர். விசாரணையில், குழந்தை மீண்டும் வீட்டுக்கு வர கணவன் மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த தியாகு 13.06.19 அன்று குழந்தையைக் குளிக்க வைப்பதாகக் கூறி இருவரும் தண்ணீர் நிறைந்த ப்ளாஸ்ட்டிக் ட்ரம்மில் அழுத்தி துடிதுடிக்க கொன்று உள்ளனர். அதன் பின் இருவரும் சேர்ந்து ஆற்காடு அருகே உள்ள டெல்லிகேட் பாலாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவு புதைத்து விட்டு சென்றதாகக் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் வத்தட்சலா மற்றும் போலிசார் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அங்கேயே உடற்கூராய்வு முடிந்து மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.