Skip to main content

ஆறுநாட்கள் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமை... 10 ஆம் வகுப்பு மாணவியை மீட்ட காவல்துறை

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை ஆறுநாட்களாக தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த பொறியியல் முதலாமாண்டு மாணவர் போக்சோ சட்டத்தில் கைதாகியிருப்பது கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரை கடந்த 6 நாட்களாக காணவில்லை என்று அஞ்சலியின் தாயார் லதா, திருப்பனந்தாள் காவல்நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தார்.

 

INCIDENT IN THANJAI ANAIKARAI

 

புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணையை துவங்கிய பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுனாவும், திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதாவும். கடந்த 6 நாட்களாக அஞ்சலி பழக்கவழக்கத்திலிருந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அணைக்கரை விநாயகர் தெருவிலுள்ள ஒரு வீட்டில் மாணவி மாணவியை அடைத்து வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர்கள் சுகுணா மற்றும் கவிதா, சக போலீஸாரும் அந்த வீட்டை முழுமையாக ஆய்வுசெய்தனர். மாணவி அஞ்சலி சுவருக்கும் பீரோவுக்கும் இடையில் பல்லியைப்போல் ஒட்டியிருந்தவரை கண்டுபிடித்து அந்த மாணவியை மீட்டனர்.

பிறகு அந்த பெண்ணிடம் ஆய்வாளர் சுகுணா விசாரித்தார், விசாரணையில், கடந்த 6 நாட்களாக அந்த மாணவி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயதான கல்லூரி மாணவன் என்பதும் தெரியவந்து அவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மாணவன் ராஜன் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான், அவனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனை சாதகமாக்கிக் கொண்டவன் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளான். அந்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.

..

 

 

சார்ந்த செய்திகள்