Published on 08/05/2022 | Edited on 08/05/2022

ராமேஸ்வரத்தில் கார் பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள மரைக்காயர்பட்டினம் என்ற இடத்தில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் வந்த ஜெகதீஷ், மகேஷ், ஜெகன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வழியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருசக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மரைக்காயர் பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.