Skip to main content

சிறையா? தடையா?- மதியம் உத்தரவு!!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
nn

 

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பொது சொத்துக்களை தாக்கிய வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேலுமுறையீட்டு வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்தது.  மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

bb

 

கடந்த 1998ம் ஆண்டு பாலகிருஷ்ணா ரெட்டி பா.ஜ.க.வில் இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். 

 

 

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தண்டனை விதிப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தண்டனையை நிறுத்திவைக்க சொன்னால்கூட சரி தீர்ப்பை ஏன் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்புக்கு வைத்துள்ளது. எம்எல்ஏ பொறுப்பில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற நோக்கத்தில் தீர்ப்பை நிறுத்திவைக்க கோருகிறீர்களா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துசெல்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் வாதபிரதி வாதங்கள் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்