கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் பிரசன்னா மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் நோக்கத்தோடு கடலூர் அடுத்த உச்சிமேடு அருகில் இரவு ரோந்து பணியில் ஈட்பட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி வந்த டாடா இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டபோது அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காவல்துறை நிறுத்தியும், நிறுத்தாமல் வண்டியை திருப்பி உச்சிமேடு பகுதியை நோக்கி சென்றார். அப்போது அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் பிடித்தனர். பின்பு அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் 20 சாக்குப் பையில் சுமார் 1200 லிட்டர் சாராயம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் காரை ஓட்டி வந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் உட்பட சாராயத்தின் மொத்த மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் என்று தெரியவந்தது. இந்த சாராய கடத்தலில் மேலும் பலர் இருப்பதாக காவல் துறை சந்தேகப்பட்டு தொடர்ந்து ஓட்டுநர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.