Skip to main content

விருப்பப்பாடமாக மட்டுமே இந்தி:புரிந்து கொள்ளாமல் பிரச்சனையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் - இல.கணேசன் பேச்சு!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

தமிழ்நாட்டில் தமிழே தெரியாத இளைஞர் சமுதாயம் ஒருபுறம் உருவாகிவருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

 



நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்துள்ள திருக்கடையூர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்திருந்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், சாமி தரிசனம் முடிந்தகையோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார்,  அவர் கூறுகையில், 

 

bjp

 

 

"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஏன் தோற்றது என்பது குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளோம், தற்போது டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பதிப்பிற்கு கடுமையாக எதிர்ப்பு உருவாகி வருகிறது. அதேநேரத்தில் இந்த விவாதம் நடந்தபோது கேரள அரசாங்கம் சாலையோரமாக நெடுஞ்சாலைகளின் ஓரமாகவும் குழாய்களை பதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் விளைநிலங்களை கடந்த பதிக்க வேண்டும் என்று ஒப்பந்தகார்கள் கூறியபோது திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது அவர்கள் ஏன் இது குறித்து விவாதிக்க வில்லை. நாங்கள் செய்யாத தவறுகளை, அவர்கள் செய்த தவறுகளை எங்கள் மீது மடைமாற்றி குறைகளை சொல்லி அவர்கள் லாபத்தை அறுவடை செய்து விட்டார்கள். மக்கள் மத்தியில் இதை எடுத்துக்கூற தான் போகிறோம். வீதிவீதியாக செல்ல இருக்கிறோம்.

 



 ஒவ்வொரு தேர்வு முடிவுகள் வரும் போதும் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் இதுபோன்ற தற்கொலையை ஆதரிக்க கூடாது. மாணவர்களுக்கு மனவலிமையை ஏற்படுத்த வேண்டும். பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறிவரும் அவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை. பாரதியார் எப்போது பச்சை கோட் அணிந்திருந்தார், அவர் எப்போதும் கருப்பு கோட் தான் அணிந்திருப்பார். அரசு கல்வி கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் முழுவதும் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை ஏற்படுத்த முயல்கின்றன. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காத, படிக்கத்தெரியாத, படிக்க விருப்பமில்லாத மாணவ சமுதாயம் உருவாகிவருகிறது. "என்கிறார் அவர்.

 

 

 

சார்ந்த செய்திகள்