Skip to main content

“இதே நிலை தொடர்ந்தால்... பாம்புகளை கலெக்டரிடம் ஒப்படைப்போம்” - ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

If this situation continues ... we will hand over the snakes to the collector

 

இன்று (29.11.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி, அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 7வது வார்டு வடக்கு கடை காயிதே மில்லத் நகர் மற்றும் மலை அடிவாரம் பகுதியில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

 

மாநகராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதியும் மாநகராட்சி செய்து தந்ததில்லை. குறிப்பாக, இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. மேலும், இங்கு நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. அதுவும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

 

ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகராட்சியைக் கண்டித்து ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மீண்டும் இதேநிலை தொடர்ந்தால், அடுத்த வாரம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இப்பகுதியில் உள்ள பாம்புகள், விஷப் பூச்சிகளை பிடித்து கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.