Published on 09/07/2022 | Edited on 09/07/2022
ஈரோடு மாவட்டத்தில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்கு மாலை போட்டும், தேங்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு சந்திப்பில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் சிரமமாக இருப்பதாகக் கூறி ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் ஈரோட்டில் இருந்து திருச்சி வரை பயணிகள் ரயில் இன்று (09/07/2022) முதல் மீண்டும் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அந்த ரயிலுக்கு மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும், ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஈரோடு மக்கள்.