Skip to main content

முறைகேடுகள் இல்லாமல் தேர்தல் நடைபெற்றால் மகிழ்ச்சி! - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 11/12/2017 | Edited on 11/12/2017
முறைகேடுகள் இல்லாமல் தேர்தல் நடைபெற்றால் மகிழ்ச்சி! - தமிழிசை சவுந்தரராஜன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் முறைகேடுகள் நடப்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழக தேர்தல் ஆணையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார்க்கடிதம் அளித்தார்.



அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் தனியான அமைப்புகளே. குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் வேண்டுமானால், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த அமைப்புகளையெல்லாம் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தி இருக்கலாம். அந்த அனுபவத்தில் எங்களைக் குற்றஞ்சாட்டலாம். ஆனால், இந்த இரண்டு அமைப்புகளும் ஜனநாயக முறைப்படி, மக்களின் நலனுக்காக சுயமாக செயல்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த முறை நடந்ததை தேர்தல் ஆணையம்தான் சரிசெய்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. 

முறைகேடு நடைபெற்று அதைக் கவனித்து தேர்தல் நிறுத்தப்பட்டால் மகிழ்ச்சி. முறைகேடுகள் நடக்காத வண்ணம் இந்த நிமிடத்தில் இருந்து தேர்தல் முறையாக நடைபெறுமென்றால் அதை நடத்தவேண்டும் என்பது எங்கள் விருப்பம். 



தற்போது தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்து இருக்கிறோம். தேர்தல் ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். என தெரிவித்துள்ளார்.

படங்கள் - அசோக் குமார்

சார்ந்த செய்திகள்