Skip to main content

ஹைட்ரோ கார்பன் வேண்டாம், கடைமடை வரை காவிரி வேண்டும்!! வீட்டு வாசலில் விளக்கேற்றிய மக்கள்.

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்து பொன் விளையும் பூமியை மலடாக்க வேண்டாம் என்று பல வருடங்களாக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராடி வந்தனர்.
 

hydrocarbon issue


இந்த நிலையில் தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவித்த நிலையில் தான் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமானது. நெடுவாசலில் 196 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடந்தது. நெடுவாசல் போராட்டம் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் சினிமா துறை, மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளையும் இழுத்து வந்தது. 

அந்த போராட்டத்தை பார்த்த பிறகு மத்திய மாநில அரசுகள் திட்டம் வராது என்று போராட்டக் களத்திலேயே வந்து உறுதியளித்தனர். ஆனாலும் திட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை. தொடர்ந்து போராடிய விவசாயிகள் கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அதன் பிறகு டெல்டா மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்து முயன்று வருகிறது.


போராட்டக்காலங்களில் சொந்த ஊருக்கு வந்த இளைஞர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்பியுள்ள
நிலையில், ஹைட்ரோ கார்பன் வேண்டாம் கடைமடை வரை காவிரியை பாயவிடுங்கள் என்ற கோரிக்கையை வலியுத்தி டெல்டா மாவட்டங்களில் நெடுவாசல், பேராவூரணி உள்பட பல கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

இந்த கோரிக்கை மத்திய அரசு வரை சென்றுள்ளது. ஆனால் இனியாவது தான் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

 

சார்ந்த செய்திகள்