Skip to main content

34 வயது மூத்தவர் என்பதால் ஒத்துவரவில்லை - அக்காள் கணவருடன் கைதான 3வது மனைவி

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
 arrested



கணவர் 34 வயது மூத்தவர் என்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன், அக்காள் கணவருடன் ஏற்பட்ட தொடர்பால் கணவரை கொலை செய்திருக்கிறார் 3வது மனைவி. 
 

திருவள்ளுர் மாவட்டம், மாங்காடு அருகே பட்டூரைச் சேர்ந்தவர் 70 வயதான சாகுல் அமீது. இவரது மனைவி ஜபருனிசா. 36 வயதாகும் இவர் சாகுல் அமீதுக்கு 3வது மனைவி என கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு சாகுல் அமீது திடீரென இறந்துவிட்டார் எனவும், அவரது உடலை பூந்தண்டலத்தில் இறுதி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
 

இந்த நிலையில் உறவினர்கள் சிலர் சாகுல் அமீது உயிரிழந்தது குறித்து அறிந்து வந்துள்ளனர். அவர்கள் சாகுல் அமீது உடலை பார்த்து காயம் இருந்ததும், இதுகுறித்து ரகசியமாக போலீசாருக்கு, சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
 

சாகுல் அமீதின் தலையில் காயம் இருந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கணவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி ஜபருனிசா ஒப்புக்கொண்டார். சாகுல் அமீதின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

போலீசார் விசாரணையில், கணவன் தன்னைவிட 34 வயது மூத்தவர் என்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வயது அதிகம் இருப்பதால் கணவருடன் வாழ்வத ஒத்துவரவில்லை என்ற முடிவுக்கு ஜபருனிசா வந்துள்ளார். இந்த நிலையல் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் தனது அக்காள் கணவர் உசேனுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த விசயம் சாகுல் அமீதுக்கு தெரியவர, அவர் ஜபருனிசாவை கண்டித்துள்ளார்.
 

சாகுல் சமீது கண்டிப்பால் ஜபருனிசா உசேனை சந்திக்க முடியவில்லை. கடந்த வாரம் இவர்கள் சந்தித்தபோது சாகுல் அமீதை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு உசேனை வர சொல்லியிருக்கிறார். அவர் வீட்டில் மறைந்து இருந்துள்ளார். வழக்கம்போல இரவு வந்த சாகுல் அமீதை ஜபருனிசா பிடித்துக்கொள்ள உசேன் கம்பியால் தாக்கியுள்ளார்.
 

உசேன் தாக்கியதில் சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சாகுல் அமீது உடலை ஒரு வாகனத்தில் எடுத்துக்கொண்டு, வீட்டை பூட்டிக்கொண்டு பூந்தண்டலத்தில் அடக்கம் செய்ய புறப்பட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் சொல்லியுள்ளனர். உறவினர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லியதன் பேரில் இவர்கள் இருவரும் பிடிபட்டதாக தெரிய வந்தது. 



 


 

சார்ந்த செய்திகள்