தமிழக அரசு சாதி சான்றிதழை மக்கள் எளிதாக பெறும் வகையில் "இ-சேவை" (TN Government e-Service) மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கியுள்ளது. இந்த மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் , தாசில்தார் அலுவலகங்கள் , மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய பகுதிகளிலும் தமிழக அரசின் "இ-சேவை மையங்கள்" தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இந்த இ-சேவை மையத்தை அணுகி மக்கள் எளிதாக "சாதி சான்றிதழ்" பெற்றுக்கொள்ளலாம்.
சாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் !
1.தந்தை அல்லது தாயின் சாதி சான்றிதழ். பெற்றோர்களிடம் சாதி சான்றிதழ் இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து குழந்தையின் பெயரையும் , அவர்களின் சாதி பெயரை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் தரும் சான்றிதழை இ சேவை மையத்தில் கொடுக்க வேண்டும்.
2. குழந்தையின் ஆதார் அட்டை .
3. தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை
4.நிரந்தர முகவரி அடையாள அட்டை.
5.குழந்தையின் பிறப்பு சான்றிதழ் .
6.குடும்ப அட்டை.
இவை அனைத்தும் "SCAN" செய்து பதிவேற்றம் செய்யப்படும். எனவே சாதி சான்றிதழ்க்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அனைத்து அசல் ஆவணங்களையும் இ - சேவை மையத்திற்கு கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம்.
இணைய தளம் மூலம் விண்ணப்பித்த பின்பு சமந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில் சாதி சான்றிதழ் விண்ணப்பித்தற்கான "Acknowledgement No" இடம் பெறும். மேலும் இ- சேவை மையத்தின் அலுவலர் விண்ணப்பித்தற்கான "Acknowledgement Receipt"யை சமந்தப்பட்ட விண்ணப்பத்தாரருக்கு வழங்குவர். பின்பு விண்ணப்பித்த சான்றிதழின் நிலையை அறிய "155250" என்ற எண்ணுக்கு "Acknowledgement No "யை டைப் செய்து குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இந்த குறுந்தகவல் ஒரு முறை அனுப்பினால் எவ்வித கட்டணமும் இல்லை. ஒரு முறைக்கு மேல் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் ரூபாய் 1யை கட்டணமாக தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
குறிப்பு : இணையதளத்தில் விண்ணப்பித்து தமிழக அரசால் வழங்கப்படும் "சாதி சான்றிதழே" அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் செல்லும் என தமிழக அரசு உத்தரவிட்டது என்பது அனைவரும் அறிந்தது. சாதி சான்றிதழை விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 60யை தமிழக அரசுக்கு இ-சேவை மையம் மூலம் மக்கள் செலுத்த வேண்டும்.
OBC சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் !
1.ஓபிசி சான்றிதழ் பெற விண்ணப்பத்தாரரின் அசல் சாதி சான்றிதழ் வேண்டும்.
2.பள்ளி மாற்று சான்றிதழ் வேண்டும்.
3.ஆதார் அட்டை (அல்லது) ஓட்டுநர் உரிமம்.
4.வாக்காளர் அடையாள அட்டை.
5.குடும்ப அட்டை .
இதையும் இ-சேவை மையத்திற்கு சென்று (OBC) சான்றிதழை விண்ணப்பித்து சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூபாய் 60 யை இ-சேவை மையம் மூலம் தமிழக அரசுக்கு கட்டணத்தை செலுத்தலாம். எந்த சேவை மையத்தில் விண்ணப்பிக்குறோமோ அங்கேயே சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். "அரசு சமந்தப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் "இ-சேவை" மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே அனைத்து சான்றிதழ்களும் கனிணி மையமாக்கப்பட்டுள்ளது". மேலும் இந்த சான்றிதழ் கீழே "QR CODE" இடம் பெறும் இதை "SCAN" செய்து சேமித்து வைத்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு குழந்தைக்களையும் பள்ளியில் சேர்க்கும் போதும் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறும் போதும் "சாதி சான்றிதழ்" தேவை அவசியமாகிறது. மேலும் மாநில அரசுக்கு சாதி சான்றிதழ் போதுமானது. ஆனால் மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது (OBC) சான்றிதழ் அவசியம் தேவை எனவே இந்த சான்றிதழையும் பெற்று கொண்டால் மிகச்சிறப்பாகவும் , தேவைப்படும் இடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
பி . சந்தோஷ் , சேலம் .