Published on 06/09/2020 | Edited on 06/09/2020

தமிழகத்தில் இருந்து டெல்லி, பீஹார், மேற்குவங்கம் மாநிலங்களுக்கு செல்லும் மூன்று சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 12- ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல்- டெல்லி, சென்னை சென்ட்ரல்- சாப்ரா, திருச்சி- ஹவுரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10- ஆம் தேதி முதல் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.