'Same alliance; additional seats' - MDMK passes resolution

ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக அதிக இடங்களைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மூன்றாவது முறையாக மதிமுகவின் 31 வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ மேலும் 1800 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மறைந்த மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி இல்லாமல் ஈரோட்டில் முதல்முறையாக நடைபெறும் முதல் பொதுக்குழுவாகும் .

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுக திமுக கூட்டணியில் தொடரும்; தற்பொழுது மதிமுக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருப்பதால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அங்கீகாரம் பெறும் வகையில் அதிகமான தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும்; தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

அங்கீகாரம் பெறும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம்அதிகமான தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்ற தீர்மானம் வாசிக்கப்பட்டபோது அங்கிருந்தமதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.