கரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, கரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும்போது, ரூ.510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘இது போதுமானதாக இருக்காது, கரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்ததுடன், வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும், ‘கரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அதன்மூலம், அரசால் கட்டாயப்படுத்தப்படுவதை தவிர்க்கலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வரச்சொல்வது போன்று சிறுவன் பேசுவதை அனுமதிக்க முடியாது. 144 தடை உத்தரவைமீறி, தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்களது நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத்தன்மையை ஆராய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.