Skip to main content

திருவாரூர் திரு.வி.க கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

பாரம்பரியம் மிக்க திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி சமீபகாலமாக போராட்டகளமாக மாறிவருகிது. மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவது தொடர் நிகழ்வாகி வருகிறது. கடந்த வாரத்தில் கல்லூரியில் இருந்து மாணவர் ஒருவர் நீக்கப்பட்டார். அவரை உடனே சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

COLLEGE STUDENT

 

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் கடந்த வாரத்திற்கு முன்பு தமிழ்துறை முதலாமாண்டு மாணவரும், மாணவர் அமைப்பின் தலைவருமான மாரிமுத்து கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வேண்டும் என மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார், அவர் கல்லூரியை நடத்த விடாமல் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கூறி கல்லூரி நிர்வாகம் அந்த மாணவரை நீக்கியது.

 

இந்த செய்தி கல்லூரியில் முழுவதும் பறவியதைை தொடரந்து, மாணவர் மாரிமுத்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழத் துறையை சேர்ந்த மாணவர்களோ தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருந்தனர். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் வரும் வெள்ளிகிழமை 27-ம் தேதி வரைகல்லூரிக்கு விடுமுறை என உத்தரவிட்டது.

 

இந்த செய்தி கல்லூரி மாணவர்களுக்கு தெரியவர,  நிர்வாகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ,கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்தை மீண்டும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால் திருவாரூர் ,நாகை, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சார்ந்த செய்திகள்