Published on 05/07/2022 | Edited on 05/07/2022
![Heavy rain in 5 districts today...](http://image.nakkheeran.in/cdn/farfuture/kWoyAu8xgUd6LY9ujdhrRW9INrRPavbRwvCfaqlC2pY/1657026943/sites/default/files/inline-images/y30.jpg)
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பொழிய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.