Published on 23/10/2018 | Edited on 23/10/2018
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ளது குன்னத்தூர். இந்த ஊரை சேர்ந்த தினேஷ் குமார் - மீனா இருவருக்கும் களமரு தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பெற்றோர், உற்றார் நண்பர்கள் முன்னிலையில் நேற்று காலை சிறப்பான முறையில் திருமணம் நடந்தது.
திருமண விருந்து என்றால் தலைவாழை இலை போட்டு அருசுவை விருந்து வைப்பார்கள். ஆனால் இந்த திருமண விருந்து மிக மிகவித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது.
கேழ்வரகு, கம்பு, சோளம் என பல வகையான தானியங்களால் சமைக்கப்பட்ட கூழ் வழங்கப்பட்டது. மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் நின்றபடியே பூண்டு மற்றும் மாங்காய் ஊறுகாயை தொட்டுக் கொண்டும், வற்றல் மற்றும் வெங்காயம் கடித்துக்கொண்டும் கூழை வாங்கி குடித்துவிட்டு உற்சாகமாக சென்றனர். இந்த வித்தியாசமான விருந்தை பற்றியே அப்பகுதியினர் பேசி வருகின்றனர்.