


Published on 06/10/2020 | Edited on 06/10/2020
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை கொலையை கண்டித்து தென்சென்னை காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வாயிலில் மாபெரும் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த அடையார் டி.துரை, முத்தழகன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கே.வி. தங்கபாலு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் போராட்டத்தின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் மனீஷாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.