Skip to main content

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

govt primary school morning meal go passed
கோப்பு படம்

 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை குறிப்பிட்ட பள்ளிகளில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 404 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் இப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்