அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா, கடந்த 11ஆம் தேதியோடு ஓய்வுபெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்த நிலையில், துணைவேந்தரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால், அவர் கடந்த 11ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
துணைவேந்தராக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை அவர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், “குடியிருப்பை உடனடியாக காலி செய்ய முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்க உள்ள நிலையில், குடியிருப்பை காலி செய்ய இரண்டு மாதமாவது அவகாசம் தேவை. இதற்கு முன் துணைவேந்தராக இருந்தவர்கள் அரசு ஒதுக்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்யவில்லை. பிற முன்னாள் துணைவேந்தர்களுக்குத் தரப்பட்ட சலுகை எனக்கும் தரப்பட வேண்டும்” என சூரப்பா தெரிவித்துள்ளார்.