Skip to main content

தினகரனுக்காக எடப்பாடி செலவழித்த பணம் - வருமான வரித்துறை அதிரடி

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
e

 

ஜெ. மறைந்ததை அடுத்து அவர் சட்டன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில்   டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது. 

 

அந்த தேர்தலில் ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வாக்காளர்களுக்கு  வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்த பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.   இந்த சோதனையில் பணம், ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.   வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிட்ட ஆவணங்களும் ஆதாரத்துடன் சிக்கியதால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

 


இந்த பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவரது உறவினர்களின் எந்தெந்த வங்கிக்கணக்கில் இருந்து எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று சீலிட்ட உறையில் வைத்து சென்னை நீதிமன்றத்தில் இன்று வருமான வரித்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.  மேலும்,  அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் உறவினர்களின் வங்கிக்கணக்கில் இருந்து எந்தெந்த வங்கிக்கணக்கிற்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களை அந்த சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு எதிராக டிடிவி தினகரன் காய் நகர்த்தி வரும் நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா- தினகரனுக்காக எடப்பாடி பழனிச்சாமி எப்படி பலிகடா ஆக்கப்பட்டார் என்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே, டெல்லியில் உத்தரவை அடுத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வங்கிக்கணக்கு பட்டியலில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அதிரடியாக முன் எடுத்து வைத்துள்ளது வருமான வரித்துறை என்று தகவல்.

 

சார்ந்த செய்திகள்