Published on 04/02/2021 | Edited on 04/02/2021

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (04.02.2021) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 35,976 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து 4,497 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 72.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.