Published on 23/07/2018 | Edited on 23/07/2018
![covai](http://image.nakkheeran.in/cdn/farfuture/GX6a1m5LllwlJceLILhg20F8bweb-7MU80VYKK8GwdY/1533347644/sites/default/files/inline-images/covai%20450.jpg)
தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை சுந்தராபுரம் கருப்பராயன் கோவில் பகுதியைச்சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தனலட்சுமி. இவரது கணவர் இறந்து நிலையில் , இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் லதா என்பவர் தனலட்சுமியை காரணமே இல்லாமல் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லதா வீட்டில் வைத்திருந்த 100 ரூபாய் பணத்தை தனலட்சுமி திருடி விட்டதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் மாற்றுதிறனாளியான தனலட்சுமியை இன்று காலை உதைத்தும், செருப்பால் அடித்தும் லதா மானபங்கப்படுத்தியுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்க வந்தவர் அலுவலக வாயிலில் அமர்ந்து தனக்கு நீதி வேண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தினர். தனக்கு யாரும் இல்லாத காரணத்தால் பாபு மற்றும் அவரது மனைவி லதா இருவரிடமிருந்தும் தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார்.