Skip to main content

தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
pr pandian protest



கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. 

விழுந்த தென்னை மரங்களை அகற்றி உரிய விலை நிர்ணயம் செய்து, அதனை வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் அரசே ஏற்றுமதி செய்ய வேண்டும்.
 

தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். 
 

தென்னங்கன்று இலவசமாக உடனே வழங்க வேண்டும். மரம் வளர்க்கும் பணிகளை துவங்கிட அரசு நிதி உதவி செய்திட வேண்டும்.
 

ஐந்து ஆண்டு காலம் தென்னை பராமரிப்பு செலவுகள் முழுமையும் அரசே ஏற்றிட வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல அலுவலகம் பட்டுக்கோட்டையில் ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். 

 

pr pandian protest


 

 

 

 

 

சார்ந்த செய்திகள்