Published on 26/12/2018 | Edited on 26/12/2018
வரும் ஜனவரி 2ஆம் தேதி தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது.
இதனையடுத்து அன்று மாலை சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சபாநாயகர் அறிவிப்பார். மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவாத்தின் இறுதியில் முதல் அமைச்சர் பதில் அளித்துப் பேசுவார்.
சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் மேகதாது விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம், 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.