Published on 14/11/2018 | Edited on 14/11/2018

கஜா புயல் நாளை கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல், மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.