




Published on 29/09/2021 | Edited on 29/09/2021
முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.