Published on 29/10/2023 | Edited on 29/10/2023

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்று (29.10.2023) முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த பட்டாசு விற்பனையானது நவம்பர் 12 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக 55 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காகத் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.