Skip to main content

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நிதி பெற்றுத் தருவதாக கூறி 64 இலட்ச ரூபாய் மோசடி - கோவையில் ஒருவர் கைது

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
Coimbatore



கோவையில் தொழில் துவங்க நிதி பெற்று தருவதாக 64 இலட்ச ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்

.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா ஸ்ரீஜா. இவர் தனது தோழிகளான சசிகலா, தரா, ஷிபா ஆகியோருடன் இணைந்து புதிதாக தொழில் துவங்க திட்டமிட்டுள்ளார். அப்போது அறிமுகமான ஜான் அமலான் என்பவர் 25 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து நிதி பெற்று தருவதாக கூறியுள்ளார். 



இதனை நம்பி ரேஷ்மா 64 இலட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் நிதி பெற்று தராமல் ஜான் அமலான் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து 64 இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக ரேஷ்மா ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஜான் அமலானை கைது செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள தில்ஜித் புருஷோத்தமன், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
 

 


 

சார்ந்த செய்திகள்