Skip to main content

’ராஜராஜ சோழன் ஆட்சிகாலம் பொற்காலம் அல்ல; இருண்டகாலம்!’ - பா.ரஞ்சித்தின் பேச்சும் எதிர்வினையும்

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 

கும்பகோணம் அடுத்துள்ள உடையாளூரில் ராஜராஜசோழனின் சமாதி இருப்பது உண்மையா என ஆய்வுகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், கும்பகோணம் பகுதிக்கு வந்திருந்த திரைப்பட இயக்குனர் பா,ரஞ்சித்,  "ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிகாலம் பொற்காலம் என்பார்கள், அது உண்மையல்ல அவரது ஆட்சிகாலம் தான் இருண்ட காலம்," என கூறி பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

 

p

 

ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்துமக்கள் கட்சியினர், மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதால்  இப்பிரச்சினை மேலும் சூடுபிடித்திருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருப்பனந்தாள் கடைவீதியில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் டி,எம்,மணி என்கிற உமர்பருக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். " தமிழகத்தில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்ததும், புறையோடிக்கிடப்பதும் இந்த பகுதியில்தான். ஒருங்கினைந்த தஞ்சை டெல்டா பகுதியில் தான். அதற்கு காரனம் நிலங்கள் தான்.

 

 ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள்.  ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்ட காலம். எத்தனையோ பேர் சொல்றாங்க ராஜராஜ சோழன் எங்க சாதி என்று.  இங்குள்ள பறையர்கள் சிலர்கூட சொல்கிறார்கள் ராஜராஜ சோழன் எங்க சாதி என்று.  சத்தியமாக சொல்கிறேன் ராஜராஜசோழன் என்னுடைய சாதியாக இருக்கவே முடியாது. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான். 

 

சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறையை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்கலவிலாஸ் என வைத்துக் கொண்டு மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்தது ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான். 26 பெண்களை கோலார் தங்கவயலுக்கு விற்ற அயோக்கிதன ஆட்சியும் ராஜராஜ சோழன் ஆட்சிகாலம் தான். சாதியம் தலைத்தூக்கியதும் அப்போதுதான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம்."என்று பேசி சூடாக்கினார்.

 

ரஞ்சித்தின் இந்த பேச்சை கண்டித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். அதில்,"திரைப்பட இயக்குனர் ரஞ்சித்  ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம்தான் வரலாற்றில் இருண்ட காலம் அவருடைய ஆட்சியில் தான் சாதிய ரீதியான ஒடுக்குமுறை அதிகமாக இருந்தது. ராஜராஜ சோழன் ஆட்சியில் தான் கோலார் தங்க வயலுக்கு 26 பெண்களை விற்றுள்ளனர் என்று சாதி அடிப்படையிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இது இறையாண்மைக்கு எதிராக உள்ளது, சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் விதத்தில் அவரது பேச்சி அமைந்துள்ளது.எனவே பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்." என கூறி பதிவுசெய்ய வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த புகாரை அடுத்து ரஞ்சித்தின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது,  சமாதி சர்ச்சை ஒருபுறம், அவர் எங்களுக்குத்தான் என பல சாதியினர் சொந்தம் கொண்டாடி மோதிக்கொள்கின்றனர், இதற்கு ஒரு முடிவு சொல்லமுடியல, அவர் பேச்சுக்கு புகார் வாசிப்பது எந்தவிதத்தில் நியாயம் என தலித் அமைப்புகள் பதிலடி கொடுக்கத்து வங்கியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்