திருச்சி மாவட்டம், லால்குடி பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி கனிக்கும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே ஊரைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இவர்களுக்கு இடையே இருந்த முறையற்ற உறவு கனியின் கணவர் செந்திலுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் மணிமாறன் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த செந்தில் கத்தியால் அவரது தோள்பட்டை, முதுகு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மணிமாறனை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த விவகாரம் குறித்து லால்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, மருத்துவமனைக்கு சென்று மணிமாறனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், செல்ந்தில் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.