கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த அல்லாளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், “எனது தந்தை வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமணசுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று(7ம் தேதி) காலை 9.30 மணியவல் க.பரமத்தி காவல்நிலைய காவலர் எனக்கு போன் செய்து எனது தந்தை திருச்சி அரசு, மருத்துவமணையில் இறந்து விட்டதாகவும், தந்தைக்கு கரூர் காருடையாம்பாளையம் அருகில் கடந்த 21/09/2022 அன்று விபத்து ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இறுதியாக திருச்சி அரசு மருத்துவமணையில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், க.பரமத்தி காவல்நிலைய காவலர் வேறு எந்தவிதமான விரங்களையும் தரமறுத்துவிட்டார்.
கடந்த 21/09/2002 அன்று விபத்து ஏற்பட்டு இன்று வரை எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எத்தவித தகவலும் அளிக்கவில்லை. என் தந்தையின் இறப்பில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சந்தேகம் உள்ளது. என் அப்பா பணிபுரிந்த வெங்கடரமண சாமி புளூ மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் மீது சந்தேகம் ஏற்படுள்ளது. மேலும், க.பரமத்தி பகுதியில் சுமார் 5 முதல் 6 மர்ம மரணம் ஏற்ப்படுள்ளது. எனது தந்தையின் மரணத்திற்கு காரணமான நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.