Skip to main content

"பயிர் கருகல விவசாயிகள் பொய் சொல்றாங்க" திருவாரூர் விவசாயிகளை கடுப்பேற்றிய அமைச்சர் காமராஜ்

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

admk

 

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகுகிறது என்பது தவறான தகவல்,கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வரின் அறிவுரைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறார் அமைச்சர் காமராஜ்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகள், நகர மேம்பாட்டு குழு நிர்வாகள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நகர் மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து தொிவித்தனர். 

அனைத்தை கேட்ட அமைச்சர் காமராஜ் விரைவில் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று திருவாரூர்
சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

 

அதன் பிறகு செய்தியாகளிடம் கூறிய அமைச்சர் காமராஜ், " திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுகிறது என்பது தவறான  தகவல் பயிர்கள் கருகவில்லை, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையில்லாமல் ஆட்சிக்கு எதிராாக விவசாயிகள் வேண்டுமென்றே   போராட்டம் நடத்துகிறார்கள். திருவாரூரில் வெகுவிரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "என்றார்.

 

"அப்போ நேரடி விதைப்பு விதைத்த சம்பா பயிர்கள் காருகுவது, சம்ப பயிரில் கணக்கில் வராது போல, நடவு செய்தது தான், சம்பா பயிர் கணக்கில் வரும் என்பது போல அமைச்சர் பேசுகிறார். கருகிய பயிர்களை காப்பாற்ற வீதியில் இறங்கி அக்கினிசட்டி ஏந்தியும், பாடைகட்டியும், ஏந்தம் இறைத்தும், போராடம் நடத்துவது வேளைவெட்டியில்லாம செய்கிறார்கள் என்கிறாரா,  டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து தண்ணீர் இறைப்பது தேவையில்லாமல் செய்கிறார்கள் என்கிறாரா அமைச்சர். அமைச்சர் காமராஜின் பேச்சு பொறுப்பற்ற பேச்சு, விரைவில் தேர்தல் மூலம் அவருக்கு உணர்த்துவோம் ".என்கிறார்கள் போரோடிவரும் விவசாயிகள்.


 

சார்ந்த செய்திகள்