மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா வைரசால் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வீதம் குறிப்பிட்ட நேரத்தில் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வருகின்றனர். இதனால் முக கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப்பணியாளுக்கு முககவசம் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை எழும்பூர் காவல் ஆயுதப்படை வளாகத்தில் முககவசம் தயாரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.