திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஏற்றுமதியினை மேம்படுத்த அரசுத் தரப்பிலும், மாவட்டத் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படும். ஏற்றுமதியை மேம்படுத்த அமைக்கப்பட உள்ள 75 மாவட்ட ஏற்றுமதி மையங்களில் ஒன்று திருச்சியில் அமையவுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் பங்குதாரர் தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிடின்டி பச்சாவு பேசும்போது, "இக்கூட்டமானது ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வகுக்கவே நடத்தப்படுவது. எனவே, ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கான இடர்பாடுகள், தேவைகள் குறித்து தெரிவித்திடவும்” எனத் தெரிவித்தார்.
ஐ.டி.எஸ். களாடி ரிஷிகேஷ் ரெட்டி, “ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு ஊராட்சி அளவிலிருந்து மாநில அளவில் உள்ள இடர்பாடுகளை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து. அதற்கான தீர்வினை ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். (APEDA) இயக்குநர் சோபனாகுமார், வேளாண்சார் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு உகந்ததாக மாற்றும் தொழில் நுட்பங்களைப் பற்றி பேசினார். தபால் துறை மூலமாக நடக்கும் ஏற்றுமதியின் புள்ளி விவரங்களை, இந்தியா திருச்சி மண்டல அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர்.சுரேஷ்குமார், வாழை ஏற்றுமதியை மேம்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜன், தக்க்ஷின் பாரத் கேட்வே டெர்மினல் மேலாளர் ஜெரால்டு. ஆகியோர் ஏற்றுமதியை மேம்படுத்திட அவர்களது துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். டீடிட்சியா மற்றும் பெல்சியா கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்றுமதி சார்ந்த ஆலோசனை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஏற்றுமதி நிலவரம் குறித்து விளக்கினார்.