Skip to main content

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்!

Published on 14/12/2024 | Edited on 14/12/2024
EVKS Ilangovan passed away

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில வாரங்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் அவரது உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்