Skip to main content

திருவாச்சி கரியமாணிக்கப் பெருமாள் கோவில் நிலத்தை விற்பதற்கு தடை கோரிய வழக்கு!- அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

 

erode temple land chennai high court

 

 

ஈரோடு மாவட்டம், திருவாச்சியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் நிலத்தை விற்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சியில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமா 500 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோவிலின் 4.59 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்து சமய அறநிலையத்துறை விதிகளை மீறி, பொதுநலன் என்ற பெயரில், இந்து சமய அறநிலையத்துறை 'வேலியே பயிரை மேய்வது' போல், கோவில் நிலம் விற்கப்படுவதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்கக் கோரி, திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார். 

 

அந்த மனுவில், சம்மந்தப்பட்ட கோவிலின் அறங்காவலர் மட்டுமே, அக்கோவிலின் நிலத்தை விற்பது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என விதி உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அறங்காவலராக இல்லாதவர், அக்கோவில் நிலத்தை விற்பது தவறு. சந்தை மதிப்பில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 12 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

நிலத்தை விற்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்கவும், நிலத்தை விற்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட  இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ண குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி; கண்ணிமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய பெண்கள் 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 women who stole during the work of counting the Tiruttani temple bill offering

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்தியுள்ளனர். இதனை எண்ணுவதற்கு   திருக்கோயிலில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் 150க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள்,   ஆகியோர்கள் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் பணியில் காலை 9.30 மணிக்கு இரண்டு பெண் பணியாளர்கள் திருக்கோயில் உண்டியல் பணம் எண்ணும் பொழுது அந்தப் பணத்தை எடுத்து மறைப்பது போல் சி.சி.டி.வி கட்சியில் பதிவாகியுள்ளது. இதனைத் திருக்கோயில் அதிகாரிகள் கவனித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதை உறுதி செய்துள்ளனர்.  உடனடியாக   திருத்தணி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருத்தணி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருத்தணி முருகன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வைஜெயந்தியிடமும்,  திருக்கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் நிரந்தர பணியாளர் தேன்மொழியிடமும் விசாரணை நடத்தினர்.  

இருவரும் உண்டியல் பணம் எண்ணும்ம் பொழுது திருடிய பணத்தை வைஜெயந்தியுடன் சேர்ந்து மலைக்கோவில் கழிவறைக்கு சென்று தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை உறுதி செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த இரண்டு பெண் பணியாளர்களிடமிருந்தும் ரூபாய் 1,15790 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் திருத்தணி முருகன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எத்தனை நாள் இது போல் உண்டியல் பணம் என்னும் போது திருடி உள்ளனர் என்றும் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மார்பில் கத்தி போட்டவாறு கோவிலுக்கு அழைத்து வந்த பக்தர்கள்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Devotees brought to the temple with knives in their chests

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டி  கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீமது இராமலிங்க  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில். பழம் பெருமை வாய்ந்த இக்கோவிலின்  பெரிய கும்பிடு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.  அதன்பின்னர் முகூர்த்தகால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய  விரதம் இருந்து காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் பாரதிநகர் பிள்ளையார்  கோவிலிலிருந்து பால்குடங்களை சுமந்தவாறு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம்  செய்தனர். அதன்பின்னர் செவ்வாய்கிழமை அம்மன் கரகம் எடுக்க விரதம் இருந்த  பக்தர்கள் கோவில் முன்பு வந்தனர். அப்போது ஜமீன்தார் அழைப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

ஜமீன்தார் முத்துராஜாவை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மாலை  அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலுக்கு வந்த ஜமீன்தார் அசுவ  வாகனத்தை (குதிரை) தானமாக கொடுக்க ஜமீன்தாருடன் கோவில்  கமிட்டியார்கள், பக்தர்கள் அம்மனை அழைத்து வர பிருந்தாவன தோப்பிற்கு  சென்றனர். அங்கு அம்மன் கரகம் மல்லிகைப்பூ வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அம்மன் கரகம் முன்பு பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்தனர். அதனை தொடர்ந்து அம்மன் கரகம் முன்பு கத்தி போடும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

Devotees brought to the temple with knives in their chests

ஜாதி மான் முதலில் கத்திபோட அதன்பின்னர்  செவ்வலேர் வம்சத்தை சேர்ந்த தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கத்தி  போட்ட பின்பு தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்கள்  மார்பில் கத்தி போட்டவாறு சௌடம்மா தீசிக்கோ! சௌடம்மா தீசிக்கோ!! சௌடம்மா தீசிக்கோ!!! என சொல்லி இரத்தம் சொட்ட சொட்ட தங்கள் மார்பு மீது  கத்தி போட்டவாறு அம்மனை அழைத்தனர். அதனை தொடர்ந்து ஜமுதாவி  அம்மனை போல் அலங்கரித்த கரகத்தை குதிரை மீது வைத்து அம்மன்  கரகத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மன் கரகம் பிருந்தாவன  தோப்பில் இருந்து புறப்பட்டு கஸ்தூரிபா மருத்துவமனை சாலை, பூஞ்சோலை,  தேவாங்கர் பள்ளி சாலை, பொம்மையசாமி கோவில் தெரு, கடைவீதி வழியாக  கோவிலை வந்தடைந்தது. அசுவ வாகனத்தில் அமர்ந்தவாறு அம்மன்  கோவிலுக்கு வந்தபோது ஓம்சக்தி, பராசக்தி, என்று பக்தர்கள் கோஷமிட்டனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கோவிலில் சக்திசேர்க்கும் போது தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை தங்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை வழிபாடு  செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை  நாட்டாமை வழக்கறிஞர் பி.வாசுதேவன், பெத்தனகாரர் எஸ்.முருகன், தலைவர்  ஏ.இராமலிங்கம், செயலாளர் எம்.முருகன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம்,  துணைச்செயலாளர்கள் புவனேந்திரன், இணைபொருளாளர் வி.பெருமாள்,  இணைச்செயலாளர் கே.கனகராஜ், தேவாங்கர் இளைஞர் அணியை சேர்ந்த தலைவர் சி.தேவா, வி.வீரேஸ்குமார், எஸ்.கோபிநாத், இணைத்தலைவர் தினேஷ்  குமார், இணைச்செயலாளர் விமல்குமார், மற்றும் சவடம்மன் கோவில் பூசாரி  ஏ.எஸ்.கனேசன் சாஸ்திரி, துர்கைஅம்மன் கோவில் பூசாரி கே.எம்.முருகன், கரகம் எடுக்கும் பூசாரி கார்த்திக், அஸ்வவாகனத்தில் ஜமுதாடு பெட்டி அழைத்து வரும் ஜாதிப்பிளை எஸ்.சரவணன் தலைமையிலான விழா கமிட்டியார்கள்  சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும்  மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயமஹாலில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்!