மூன்று ஆண்டுகளாக இயங்காமல் உள்ள மின்மாற்றிக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தி மின்மாற்றி இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் பல ஆண்டுகளாக மின்பற்றாக்குறை இருந்து வருகிறது. அதற்கு புதிய மின்மாற்றி பொட்டி கொண்டு வந்து குறைந்தது நான்கு மாதங்கள் ஆகியும் எந்த பணியையும் செய்யமால் காட்சி பொருளாகவே மின்துறை அலுவலர்கள் வைத்துள்ளார்கள். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்களுக்கு மின்பற்றாக்குறையை போக்காமல் உள்ளனர். மின் பற்றாக்குறையை தீர்க்க வேண்டி திருவெண்ணெய்நல்லூர் மின்துறை அலுவகத்திற்கு ஒட்டநந்தலைச் சேர்ந்தவர்கள் முறையிட்டுள்ளனர். உடனடியாக மின்மாற்றியை மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இது நாள் வரை கண்டுக்கொள்ளவில்லை என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டிய நிலைவரும். எனவே உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் மின்சார அலுவலகத்தை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒட்டநந்தல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மூன்று ஆண்டுகளாக இயங்காமல் உள்ள மின்மாற்றிக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தி மின்மாற்றி இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டமும் நடந்தது.